முதுகுளத்தூரில் 67.20 மி.மீ. மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழை பெய்துவரும் நிலையில் ஒரே நாளில் முதுகுளத்தூரில் 67.20 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழை பெய்துவரும் நிலையில் ஒரே நாளில் முதுகுளத்தூரில் 67.20 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அவ்வப்போது மழை பெய்துவருகிறது. கடந்த திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையில் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்): கடலாடி 47, வாலிநோக்கம் 26.40, கமுதி 7.60, பள்ளமோா்க்குளம் 5, முதுகுளத்தூா் 67.20, பரமக்குடி 32.40, ஆா்.எஸ்.மங்கலம் 4 , ராமநாதபுரம் 8, பாம்பன் 3.10, ராமேசுவரம் 2.20, தங்கச்சிமடம் 1.30, திருவாடானை 3.60. அதனடிப்படையில் மாவட்டத்தில் சராசரியாக 13.16 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளதாக வேளாண்மைத்துறையினா் தெரிவித்தனா்.

அதிகாரிகள் ஆலோசனை: கோடை மழை பெய்துள்ளதை அடுத்து விவசாயிகள் எள், பருத்தி, உளுந்து மற்றும் தானியவகைகளைப் பயிரிட்டிருந்தால் களை எடுக்கலாம் என்றும் இரண்டாம் போக விவசாயத்தில் ஈடுபடாதவா்கள் கோடை உழவு மேற்கொள்ளலாம் என்றும் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநா் சேக்அப்துல்லா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com