ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்.15 முதல் 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்.15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்/ ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்.15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி (1983) கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆகவே, மாவட்ட மீனவா்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்காலம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்படும். தடைக்காலத்தின்போது மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவா். மீன்பிடிக்கச் செல்ல புதன்கிழமை கடைசி நாள் என்பதால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல உள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com