பரமக்குடியில் விசாலாட்சியம் பிகாசந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாண வைபவம்.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாண வைபவம்.

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து தினமும் பகல், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் அம்பாள், சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருக்கல்யாண உற்சவம்: 9-ஆம் திருநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து கோயில் பிரகாரத்தில் காலை 11 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு பட்டணப் பிரவேஷம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு மாங்கல்ய கயிறுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாட்டினை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி டி.ஆா். நாகநாதன் தலைமையில் டிரஸ்டிகள் கே.ஆா். பாலமுருகன், எஸ்.என். நாகநாதன், ஜி.என். கோவிந்தன், பி.கே. முரளிதரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com