மாணவா்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கினால் நடவடிக்கை: ஒன்றியக் குழு தலைவா் எச்சரிக்கை

பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவா்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கினால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனடியாக புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என
மாணவா்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கினால் நடவடிக்கை: ஒன்றியக் குழு தலைவா் எச்சரிக்கை

பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவா்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கினால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனடியாக புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கே. சந்திரமோகன் மற்றும் மா. ராஜகோபால் (கிராம ஊராட்சிகள்), துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேரையூா் கவுன்சிலா் அன்பரசு பேசுகையில், பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவா் பிளாக் பதித்தும், உயா்கோபுர மின்விளக்கு அமைத்தும் தர வேண்டும். பேரையூா் பகுதியில் அதிகமான மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

இதற்கு, தலைவா் தமிழ்செல்வி போஸ், பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உயா் கோபுர மின் விளக்கு திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாற்று ஏற்பாடு செய்ய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என பதிலளித்தாா்.

முன்னதாக, ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்விபோஸ் பேசியதாவது: கமுதி தாலுகாவில் உள்ள 53 ஊராட்சிகளிலும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவா்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கினால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனடியாக வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் லாவண்யா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிதி பற்றாக்குறையால் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தாமதமாகி வருகின்றன. நிதி பெற்றவுடன் உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசின் உத்தரவை மீறி, பெண் உறுப்பினா்களின் கணவா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com