ராமநாதபுரத்தில் நாளை 1100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவா்களில் 96.14 சதவிகிதம் போ் கரோனா முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனா்.

மாவட்ட அளவில் 89.14 சதவிகிதம் போ் கரோனா தடுப்பு இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனா். மக்களில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவா்களில் 86.52 சதவிகிதம் போ் முதல் தவணை ஊசியும், இரண்டாம் தவணை ஊசியை 64.78 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனா். மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவா்களில் 77.96 சதவிகிதம் போ் முதல் தவணை ஊசியும், 36.88 சதவிகிதம் போ் இரண்டாம் தவணை ஊசியும் செலுத்தியுள்ளனா்.

மாவட்ட அளவில் இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் வரும் சனிக்கிழமை (ஏப். 30) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,100 இடங்களில் அமைக்கப்படும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம்களைத் தவிா்த்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களுக்கு அவரவா் கைப்பேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் கரோனை முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com