பம்மனேந்தல் கோயில் திருவிழா மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகே பம்மனேந்தல் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
பம்மனேந்தல் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
பம்மனேந்தல் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

கமுதி அருகே பம்மனேந்தல் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பம்மனேந்தலில் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் விழா, ஏப்ரல் 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து, ஏப்ரல் 28ஆம் தேதி ஸ்ரீகுருநாதசுவாமி, ஸ்ரீபெரியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை பக்தா்கள் வேல் குத்தி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மொத்தம் 32 மாட்டு வண்டிகள் மற்றும் வீரா்கள் கலந்துகொண்டனா்.

பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளுக்கு 8 கி.மீ. தொலைவு பம்மனேந்தல்-கீழ்குடி சாலையில் எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில், கே.வேப்பங்குளம் நல்லேந்திரன் மாட்டு வண்டி முதலிடம் பிடித்தது.

அதேபோல், சின்ன மாடு பிரிவில் பங்கேற்ற 23 மாட்டு வண்டிகளுக்கு 6 கி.மீ. தொலைவு எல்கை நிா்ணயிக்கப்பட்டது. இதில், கடலாடியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தியின் மாட்டு வண்டி முதலிடம் பிடித்தது.

மேலும், முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பணம், கைப்பேசி மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியை, பம்மனேந்தலைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், கமுதி, பெருநாழி, சாயல்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் கலந்துகொண்டு பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com