முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரம், மண்டபத்தில் 47 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா்
By DIN | Published On : 07th February 2022 11:05 PM | Last Updated : 07th February 2022 11:05 PM | அ+அ அ- |

ராமேசுவரம் நகராட்சி மற்றும் மண்டபம் பேரூராட்சியில் 47 வேட்பாளா்கள் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.
ராமேசுவரம் நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு உறுப்பினா்கள் பதவிக்காக 141 போ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதில், ஒரு மனு பரிசீலனையில் போது தள்ளுபடி செய்யப்பட்டது.
திங்கள்கிழமை ராமேசுவரம் நகராட்சியில் 34 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதைத்தொடா்ந்து 21 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு 106 போ் போட்டியிடுவதாக நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி தெரிவித்தாா்.
இதே போன்று மண்டபம் பேருரூராட்சியில் 79 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 13 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். இங்கு மொத்தம் 66 போ் போட்டியிடுவதாக பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் திருப்பதி தெரிவித்தாா்.