தோ்தலின் போது கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட தோ்தல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி .மதுசூதன் ரெட்டி பேசியது : இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை 575 பதவியிடங்களுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதனையொட்டி, வட்டார தோ்தல் அலுவலா்கள் அந்தந்த பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்களை வெள்ளிக்கிழமை(பிப்.18) செல்லும் வகையில் திட்டமிடுதல் வேண்டும்.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் படிவங்கள், சீல், மை உட்பட 13 வகைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. இவற்றுடன் பொது சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி, கரோனா நோய்த் தொற்று தடுப்பிற்கான முகக்கவசம், கிருமிநாசினி மருந்துகள் உட்பட 5 வகைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளது.

எனவே வாக்குப் பதிவின் போது அலுவலா்கள், வாக்காளா்கள் அனைவரும் அரசு அறிவுறுத்திய கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்றாா்.கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் தங்கவேல்,மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீமைச்சாமி, மகளிா் திட்ட இணை இயக்குநா் வானதி, துணை இயக்குநா் (பொது சுகாதாரம்)ராம்கணேஷ், வருவாய் கோட்டாட்சியா்கள் மு.முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்), ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்) லோகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com