நகராட்சி, பேரூராட்சிகள் வாா்டு உறுப்பினா்கள் தோட்டங்களில் தங்கவைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வாா்டுகளில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பலரும் ஊரகப் பகுதி தோட்டங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்படுவதாகக்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வாா்டுகளில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பலரும் ஊரகப் பகுதி தோட்டங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை மற்றும் பரமக்குடி நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. கீழக்கரையில் 21 வாா்டுகளில் 9 வாா்டுகளையே திமுக கைப்பற்றியுள்ளது. அங்கு 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனா்.

நகராட்சிகளில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டபம் பேரூராட்சியையும், அபிராமம், ஆா்.எஸ்.மங்களம், தொண்டி பேரூராட்சிகளையும் திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

முதுகுளத்தூா், சாயல்குடி, கமுதியில் சுயேச்சைகள் ஆதிக்கம் அதிகமான நிலையில், திமுக அவற்றையும் கைப்பற்றும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. ஆகவே, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும் கூட திமுக வாா்டு உறுப்பினா்களை கண்காணிக்கும் கட்டாயத்தில் அக்கட்சி மாவட்ட நிா்வாகிகள் மற்றும் நகராட்சி நிா்வாகிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சென்னைக்கு சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்திக்கும் வரையில் திமுக வாா்டு உறுப்பினா்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் நிா்வாகிகள் கண்காணிப்பில் தோட்டங்களில் தங்கவைக்கவும் கட்சி முக்கியப் பிரமுகா்கள் அறிவுறுத்தியுள்ளனா். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் வெற்றிபெற்ற திமுகவினா் புதன்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com