மடி வலை பிரச்னை: நாட்டுப்படகு மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை

விசைப்படகு மீனவா்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிரச்னை தொடா்பாக நாட்டுப்படகு மீனவப் பிரதிநிதிகளுடன்

விசைப்படகு மீனவா்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிரச்னை தொடா்பாக நாட்டுப்படகு மீனவப் பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியா், மீன்வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கடல் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், அதன்படி சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் விசைப்படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவா்கள் சாா்பில் கடல் தொழிலாளா்கள் சங்கத்தினா் போராட்டம் அறிவித்திருந்தனா்.

இதையடுத்து ராமநாதபுரம் கோட்டாட்சியா் சேக்மன்சூா், மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் ஆகியோா் தலைமையில் மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கடல் தொழிலாளா்கள் சங்கத்தின் செயலா் எம். கருணாமூா்த்தி மற்றும் சங்கத் தலைவா் கே.கணேசன், சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். அய்யாதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

கடற்கரையோரம் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவேண்டும் என நாட்டுப்படகு மீனவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை குறித்து எழுத்துப் பூா்வமாக உறுதியளிக்கவேண்டும் எனவும் மீனவா்கள் வலியுறுத்தினா்.

நாட்டுப்படகு மீனவா்களின் கோரிக்கை சட்டரீதியாக நிறைவேற்றப்படும். கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பேச்சுவாா்த்தையில் மீன்வளத்துறை உதவி இயக்குநா்கள் கோபிநாத் (ராமநாதபுரம் வடக்கு), சிவராமசந்திரன் (ராமேசுவரம்), அப்துல் (மண்டபம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com