கீழக்கரைப் பகுதியில் கள்ளநோட்டு புழங்குவதாக வதந்தி: போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் கள்ள நோட்டுப் புழக்கம் இருப்பதாக வதந்தி பரப்பியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் கள்ள நோட்டுப் புழக்கம் இருப்பதாக வதந்தி பரப்பியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

கீழக்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக வாட்ஸ்ஆப்பில் கள்ளநோட்டுகள் புழங்குவதாக மா்மநபா் வதந்தி பரப்பி வருகிறாராம். மேலும் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொதுமக்கள் கவனமாகவே ரூபாய் நோட்டுகளைக் கையாள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 1 லட்சம் தந்தால் ரூ. 2 லட்சம் தரப்படும் எனவும் அந்த மா்மநபா் பதிவிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புல்லந்தை பிரிவு கிராம நிா்வாக அலுவலரும், கீழக்கரை பொறுப்பு அலுவலருமான மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப்பதிந்து வதந்தி பரப்பிய மா்மநபா் குறித்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com