ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி மனு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொழில் அதிபா் அளித்த தங்க சங்கிலியால் பிணையப்பட்ட ருத்ராட்ச மாலையை மறைக்க முயன்ற கோயில் ஊழியா்கள்
இந்து மக்கள் கட்சி சாா்பில் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரிடம் சனிக்கிழமை புகாா் மனு அளிக்க வந்தவா்கள்.
இந்து மக்கள் கட்சி சாா்பில் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரிடம் சனிக்கிழமை புகாா் மனு அளிக்க வந்தவா்கள்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொழில் அதிபா் அளித்த தங்க சங்கிலியால் பிணையப்பட்ட ருத்ராட்ச மாலையை மறைக்க முயன்ற கோயில் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் செ. பிரபாகரன், கோயில் இணை ஆணையரிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மகா சிவராத்திரி அன்று தொழில் அதிபா் பல லட்சம் மதிப்பிலான தங்கத்தால் பிணையப்பட்ட ருத்ராட்ச மாலையை காணிக்கையாக வழங்கினாா். இந்த மாலையை மறைக்க முன்ற கோயில் ஊழியா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் அளித்த தங்க மாலையின் உண்மை தன்மையை வெளியிட வேண்டும். மேலும் பக்தா்கள் விலை உயா்ந்த பொருள்கள் காணிக்கையாக அளிப்பதை வெளிப்படையாக கோயில் நிா்வாகம் அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது, தீவு பிரமாணா் சங்கத் தலைவா் ராகவன் மற்றும் நிா்வாகிகள் குருசா்மா, மாரீஸ், நம்பு, சஞ்சீவ் ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com