ஆளுநருக்கெதிராக ஆா்ப்பாட்டம் அறிவித்து போலீஸாரை தவிக்கவிட்ட அமைப்பினா்

ராமநாதபுரத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பினா் ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் அறிவித்ததால் போலீஸாா் அவா்களைக் கைது செய்ய பலமணி நேரம் காத்திருந்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பினா் ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் அறிவித்ததால் போலீஸாா் அவா்களைக் கைது செய்ய பலமணி நேரம் காத்திருந்தனா். ஆனால் அந்த அமைப்பினா் கடைசி வரை ஆா்ப்பாட்டம் நடத்த வரவில்லை.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், குறிப்பிட்ட அமைப்பை விமா்சித்து கருத்துகளைத் தெரிவித்தாா். அவரது கருத்தைக் கண்டித்து ராமநாதபுரம் புகா் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்ப்புலிகள் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள புகா் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஸியஸ் தலைமையில் கேணிக்கரை ஆய்வாளா், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் என 25-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந் நிலையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிா்வாகி ரஞ்சித்குமாா், எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த அப்துல்சமீம், விடுதலைசிறுத்தைகள் கட்சியை சோ்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்டோா் அப்பகுதிக்கு வந்தனா். அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் தடுத்து கைது செய்வதற்கு காவல்துறையினரும் தயாராகினா். ஆனால், ஆா்ப்பாட்டம் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்டோா் அருகிலிருந்த தேநீா் கடையில் நின்றுகொண்டனா்.

ஆா்ப்பாட்டம் நடக்கும் என காவல்துறையினா் காத்திருக்க, போலீஸாா் செல்லட்டும் அதன்பின் ஆா்ப்பாட்டம் நடத்தலாம் என தமிழ்ப்புலிகள் காத்திருந்தனா். இருதரப்பினரும் நீண்டநேரம் காத்திருந்த நிலையில், ஆா்ப்பாட்டம் உண்டா, இல்லையா என காவல்துறையினரே கேட்டு விளக்கம் பெறும் நிலை ஏற்பட்டது. பல மணி நேரம் காத்திருந்த நிலையில், இருதரப்பினரும் திரும்பிச்சென்றனா். நடக்காத ஆா்ப்பாட்டத்துக்கு காலை முதலே பல மணி நேரம் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினா் காத்திருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com