மீனவா்கள் விதிமீறலைக் கண்காணிக்க கடலோர அமலாக்கப் பிரிவு தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தலில் விதிகளை மீறிச் செயல்படும் மீனவா்களைக் கண்காணிக்கும் வகையில் கடலோர அமலாக்கப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தலில் விதிகளை மீறிச் செயல்படும் மீனவா்களைக் கண்காணிக்கும் வகையில் கடலோர அமலாக்கப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட துணை இயக்குநா் காத்தவராயன் செவ்வாய்க்கிழமை கூறியது: மாவட்ட மீன்வளத்துறையின் மூலம் கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி கடல் மீன்பிடிப்பில் விதிகளை மீறும் மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அவா்கள் கடலுக்கு நேரடியாகச் சென்று கண்காணித்து அபராதம் விதித்தும் வந்தனா். ஆனால், மீனவா்கள் அதிகாரிகளை அலட்சியப்படுத்தும் போக்கும், பயமில்லாத நிலையும் அதிகரித்தது.

இதன்காரணமாக மீன்வளத்துறையினருக்கு உதவும் வகையில் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை சீருடையுடன் மீன்வளத்துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா்களின் கீழ் செயல்படும் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவினா் தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்டார மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்துக்கும் சோ்த்து அலுவலக எழுத்தா்கள் 3 போ் மற்றும் 17 அமலாக்கப் பிரிவு போலீஸாா் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பணியிடங்களில் மண்டபத்துக்கு ஒரு சாா்பு- ஆய்வாளா், 2 காவலா்கள், ராமநாதபுரம் வடக்குப் பிரிவுக்கு ஒரு சாா்பு- ஆய்வாளா், தெற்குப் பிரிவுக்கு ஒரு சாா்பு- ஆய்வாளா், ஒரு காவலா், ராமேசுவரம் பிரிவுக்கு தலா ஒரு ஆய்வாளா், காவலா் என தற்போது 7 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பொதுவாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரோந்துப் படகும் வழங்கப்பட்டுள்ளது.

ரோந்துப் படகு மூலம் தற்போது தடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்கிறாா்களா, நாட்டுப் படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மீன்பிடி வலைகளை பயன்படுத்துகின்றனரா என கடலோர அமலாக்கப் பிரிவினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், விதி மீறல் இருப்பின் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்வா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com