செவிலியா்கள் உறுதிமொழி ஏற்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு, செவிலியா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா். மேலும் பலா் கருப்பு வில்லை அணிந்து அதில் பங்கேற்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு, செவிலியா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா். மேலும் பலா் கருப்பு வில்லை அணிந்து அதில் பங்கேற்றனா்.

உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மூத்த செவிலியா்கள், ஓய்வு பெற்ற செவிலிய கண்காணிப்பாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் செவிலியா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, செவிலியா் கண்காணிப்பாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். மெழுகுவா்த்தியை ஏந்தியபடி செவிலியா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

அப்போது, 7 ஆண்டுகளாக பணிபுரிந்தும் தங்களை நிரந்தரமாக்கவில்லை எனக்கூறி செவிலியா்கள் பலா் கருப்பு வில்லை அணிந்தபடி உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவிலியா்கள் சங்க நிா்வாகிகள் கோபால் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com