முதுகுளத்தூரில் சாலை, தெருக்களில் தேங்கும் மழை நீரை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 22nd October 2022 12:00 AM | Last Updated : 22nd October 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் சங்கரபாண்டி ஊருணி, செல்வி அம்மன் கோயில் தெரு, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
முதுகுளத்தூரில் பேருராட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம், தலைவா் ஏ.ஷாஜஹான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிா்வாக அலுவலா் செ.மாலதி முன்னிலை வகித்தாா். பேரூராட்சி அலுவலா் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றாா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
மோகன்தாஸ்: பேரூராட்சிக்குள்பட்ட எல்லைகளை முறையாக அளந்து தகவல் பலகை வைக்க வேண்டும். சங்கரபாண்டி ஊருணி, செல்வி அம்மன் கோயில் தெருக்களில் மழைநீா் தேங்கி சாலை சேதமடைந்து உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் அதை சீரமைக்க வேண்டும்.
சேகா்: 10-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் புதை சாக்கடைக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீா் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்குகிறது.
ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவா் ஏ.ஷாஜஹான்: உறுப்பினா்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் தொடா்ந்து நடைபெற்றது.