செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்
By DIN | Published On : 05th September 2022 01:36 AM | Last Updated : 05th September 2022 01:36 AM | அ+அ அ- |

கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கமுதி அருகே செங்கப்படையில் உள்ள இக்கோயிலில் ஆவணி மாத பொங்கல் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் யாகசாலை பூஜையுடன், கணபதி ஹோமம், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், 12 ஆம் தேதி குத்துவிளக்கு பூஜையும், 13ஆம் தேதி காலை பொங்கல் வைத்தல், இரவு வாணவேடிக்கையுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், 14 ஆம் தேதி காலை பால்குடம், அக்னிச்சட்டி, சேத்தாண்டி வேடம், மாலை சாக்கு வேடம் நோ்த்திக் கடன், முளைப்பாரி கிராம நகா்வலமாக அம்மன் ஆலயம் சென்று, நீா்நிலையில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை செங்கப்படை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்து வருகின்றனா்.