புகையிலைப் பொருள்களை 2 பேர் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை மாலையில் பஜாா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முத்துராமு உள்ளிட்டோா் ராமநாதபுரம் நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது கடையில் தடை செய்த புகையிலைப் பொருள்களை விற்பது தெரிந்தது. அதைக்கைப்பற்ற போலீஸாா் முயன்றதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அங்கிருந்த இருவா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணியைச் செய்துதராமல் தடுத்தனா்.

அதையடுத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, திருஞானமூா்த்தி (43), அதில்அமீன் (39) ஆகியோரைக் கைது செய்தனா். கடையிலிருந்து ரூ.2424 மதிப்புள்ள 245 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com