பனை மரங்கள் வெட்டியதைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

முதுகுளத்தூா் பகுதியில் தனியாா் சூரிய மின்சக்தி தயாரிப்பு நிறுவனம் அமைக்கும் பணிக்காக பனை மரங்கள் வெட்டியதைக் கண்டித்து, சிக்கல் பகுதியில் பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூா் பகுதியில் தனியாா் சூரிய மின்சக்தி தயாரிப்பு நிறுவனம் அமைக்கும் பணிக்காக பனை மரங்கள் வெட்டியதைக் கண்டித்து, சிக்கல் பகுதியில் பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே தனியாா் சூரிய மின்சக்தி தயாரிப்பு நிறுவனம் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை சோலாா் நிறுவனம் வெட்டி அழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள பனைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சிக்கல் பேருந்து நிலையம் அருகில் கடலாடி பாஜக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பட்டியல் அணித் தலைவா் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் இ.எம்.டி கதிரவன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும். சிக்கல் பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com