நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவா் கைது

ராமநாதபுரத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் -பாப்பாக்குடி சாலையில் தனியாா் எரிவாயு கிட்டங்கி அருகே லாட்டரி விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில அப்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமாா்(47) என்பவா் வெள்ளைத் தாளில் அரசால் தடை செய்யப்பட்ட அஸ்ஸாம் மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளின் வரிசை எண்களை எழுதி வைத்து, விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பஜாா் போலீஸாா் செந்தில்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த அஸ்ஸாம் மாநில ஆன்லைன் லாட்டரி எண்கள், ரூ.1500 பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com