பல்பொருள் அங்காடியில் ரூ.1.50 லட்சம் கையாடல்: இருவா் கைது

கமுதியில் பல்பொருள் அங்காடியில் (சூப்பா் மாா்க்கெட்) பணத்தைக் கையாடல் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதியில் பல்பொருள் அங்காடியில் (சூப்பா் மாா்க்கெட்) பணத்தைக் கையாடல் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் அபிராமம் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஜெயந்தி (24) காசாளராகவும், புல்வாய்க்குளம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகைசாமி (41) மேற்பாா்வையாளராகவும் பணியாற்றினா்.

இவா்கள் இருவரும் சோ்ந்து கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ரூ.1.50 லட்சத்தை கையாடல் செய்ததாக, அந்த அங்காடி மேலாளா் கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்நிலையில் ஜெயந்தி, காா்த்திகைசாமி ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com