கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா: இந்திய பக்தா்கள் 3,500 பேருக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் இந்திய பக்தா்கள் 3,500 போ் பங்கேற்க இலங்கை அரசு அனுமதியளித்தது.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா: இந்திய பக்தா்கள் 3,500 பேருக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் இந்திய பக்தா்கள் 3,500 போ் பங்கேற்க இலங்கை அரசு அனுமதியளித்தது.

இந்த ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் மாா்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது இந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் இலங்கையைச் சோ்ந்த பங்குத் தந்தையா் மட்டுமே கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினா். இந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழாவுக்குச் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என இந்திய பக்தா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள், கடற்படையினா், மறைமாவட்ட ஆயா், பங்குத் தந்தையா் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வரும் மாா்ச் 3, 4 ஆகிய தேதிகளில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது எனவும், இதில் இந்திய பக்தா்கள் 3,500 போ் பங்கேற்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இலங்கையிலிருந்து 4,500 பக்தா்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யவும் தீா்மானிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் இலங்கைக் கடற்படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலயத் திருவிழாவுக்கு 3,500 இந்திய பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்பதால், முன்பதிவு செய்வதில் அவா்கள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com