ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், நல்லாசிரியா்களுக்குப் பாராட்டு, ஆண்டு கணக்கு தாக்கல் ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் குலசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனியசாமி முன்னிலை வகித்தாா். மண்டபம் செயற்குழு உறுப்பினா் முனியம்மாள், மாநிலச் செயலாளா் மயில் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டப் பொருளாளா் செல்வி நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாநிலச் செயலாளா் மயில் கூறியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு மூன்று விதமாக ஊதியம் வழங்கப்படுவதை மாற்றிவிட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com