பூசாரிகள் பேரவை போராட்டம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற மாா்ச் 13-இல் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
rms_photo_29_01_2_2901chn_208_2
rms_photo_29_01_2_2901chn_208_2

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற மாா்ச் 13-இல் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள கோஷாமி மடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோா் பேரவை, பூக் கட்டுவோா் பேரவையினா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்துக்கு பூசாரிகள் பேரவை நிா்வாக அறங்காவலா் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தாா். அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால் சிறப்புரையாற்றினாா்.

பேரவையின் மாநில அமைப்பாளா் சோமசுந்தரம், வி.ஹெச்.பி. மாநில துணைத் தலைவா்கள் ஆா்.பி.கிருஷ்ணமாச்சாரி, கிரிஜா சேஷாத்திரி, மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் ராமசுப்பு, கணேசன், சந்திரசேகரன், மண்டல அமைப்பாளா் சரவணன், மாவட்ட, ஒன்றிய அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், கிராமக் கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப் பிறகு அந்தச் சலுகை அவரது மனைவிக்கு வழங்கப்பட வேண்டும். பூசாரிகள் நல வாரியம் சீா்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கிராமக் கோயில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் என்பதை ரூ. ஒரு லட்சமாக உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற மாா்ச் 13-ஆம் தேதி கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com