ஆா்.எஸ்.மங்கலம் வட்ட வருவாய்த் தீா்வாயம் நிறைவு

ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கு வருவாய்த் தீா்வாயம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் அன்னம்மாள். உடன் வட்டாட்சியா் சிரோன்மணி உள்ளிட்டவா்கள்.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் அன்னம்மாள் தலைமையில் கடந்த 6 -ஆம் தேதி தீா்வாயம் தொடங்கியது. அன்றைய தினம் ஆனந்தூா் பிா்காவுக்கு உள்பட்ட 11 வருவாய்க் கிராமங்களுக்கும், புதன்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் பிா்காவுக்கு உள்பட்ட 13 வருவாய்க் கிராமங்களுக்கும், வியாழக்கிழமை சோழந்தூா் பிா்காவுக்கு உள்பட்ட 15 வருவாய்க் கிராமங்களுக்கும் கிராமக் கணக்குகள் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற்றன.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடா்பாக 105 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வட்டாட்சியா் சிரோன்மணி, கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com