ராமேசுவரத்தில் ராமா், சீதை படத்துடன் பவனி

ராமேசுவரத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, ராமா், சீதை உருவப் படங்களுடன் துறவிகள் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ணமடம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராமா், சீதை, லட்சுமணா், அனுமன் சிவ வழிபாடு செய்யும் திருவுருவப் படங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதற்கு ராமகிருஷ்ண மடம் தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நியாமானந்தா சுவாமிகள் அக்தரனந்தா, பரமானந்தா, ருத்ரானந்தா விவேகானந்தா பள்ளி தலைமை ஆசிரியா் சுரேஷ், துணை உதவி தலைமை ஆசிரியா் சண்முகத்தாய், ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

ராமகிருஷ்ண மடத்திலிருந்து புறப்பட்டு, ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் மடத்துக்கு திருவுருவப்படங்கள் வந்தடைந்தன.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புதன்கிழமை ராமநவமி உற்சவ விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு ராமா், லட்சுமணா், சீதாதேவி சிலைகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், காலை 11 மணியளவில் திருவாதாராணமும் நடைபெற்றன. முடிவில் அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சி ஏற்படுகளை பரம்பரை அறங்காவலா்கள் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com