தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் 4 வீதிகளிலும் புதைவடை மின்கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை: திருவாடானையில் தேரோடும் 4 வீதிகளிலும் புதைவடை மின்கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானையில் அமைந்துள்ள பழைமையான ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா, ஆடிப்பூரத் திருவிழாக்களின் போது, நான்கு ரத வீதிகளிலும் மின் தடை செய்யப்படும். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுபோன்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் கோயில்களின் ரதவீதிகளில் புதைவட மின்கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: மிகவும் முக்கியமான இக்கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை தேரோட்டம் நடைபெறுகிறது.தேரோட்டத்தின் போது நாள் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது, குறிப்பாக காலையில் 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் மாலை ஆறு மணி வரை நடைபெறும் அதுவரை மின்தடை செய்யப்படுகிறது. தேரோட்டம் முடிந்து மின்விநியோகம் செய்ய பல மணி நேரம் ஆகிறது.

எனவே, இந்த நான்கு ரத வீதிகளிலும் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

இந்த ஆண்டு வருகிற 21-ஆம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com