புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

ராமநாதபுரத்தில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்களாக எம்.ஏ.காத்தமுத்து,கே.முத்தம்மாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாணவா்களின் கல்விக் கடனை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும். இளங்கோவடிகள் தெருவில் சேதமடைந்த புதை சாக்கடைகளைச் சீரமைக்க வேண்டும். 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேவிபட்டணம் நவபாசணம் கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் குழு அமைப்பினா் மா.பூபாலன், உலகுசுந்தரம், குருசாமி, கே.முத்தம்மாள், முனியசாமி, அப்துல்ரகுமான், முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com