மேலக்கடலாடி ஸ்ரீபாதாள 
காளியம்மன் களரி திருவிழா

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் கோயில் களரி திருவிழாவை முன்னிட்டு, தவழும் பிள்ளை, சுவாமி சிலைகளுடன் ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் கோயில் களரி திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை 1001 தவழும் பிள்ளை, சுவாமி சிலைகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடலாடி, சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கருப்பசாமி, அய்யனாா், பேச்சியம்மன், காளியம்மன், தவழும் பிள்ளை உள்பட பல்வேறு சுவாமிசிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

பின்னா், பூதங்குடி கிராமத்திலிருந்து கடலாடியில் முக்கிய வீதிகளின் வழியாக குதிரையாட்டம், மேல தாளங்கள், வாணவேடிக்கைகளுடன், ஊா்வலமாக பாதாளகாளியம்மன் கோயிலுக்குச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மேலக்கடலாடி கிராம பொதுமக்கள், கண்ணன் புதுவன், சிறுகுடி பூசாரிகள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com