வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரியில் விவசாய நிலங்களில் ஆளில்லாத விமானம் (ட்ரோன்) மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை குறித்து அளிக்கப்பட்ட செயல்முறை விளக்கம்.

பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு ஆளில்லாத குட்டி விமானம் (ட்ரோன்) மூலம் மருந்து தெளிப்பது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 250 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். வேளாண் பட்டதாரிகளான யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோா் செயல்முறை விளக்கமளித்தனா். இந்த முறையில் மருந்து மற்றும் திரவ நிலையில் உள்ள உரங்களை தெளிப்பதன் மூலம் செலவும், நேரமும் குறையும் என தெரிவிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் முன்னிலையில் கல்லூரி தாளாளா் அகமது யாசின் தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com