திருவடிமதியூா் கிராமத்தில் அமைந்துள்ள அமல அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
திருவடிமதியூா் கிராமத்தில் அமைந்துள்ள அமல அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவாடானை, மே 19: திருவாடானை அருகே உள்ள திருவடிமதியூா் கிராமத்தில் அமைந்துள்ள அமல அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இங்கு ஆண்டுதோறும் மே மாதம் சப்பர பவனியுடன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக திருவடிமதியூா் பங்குத்தந்தை சேவியா் சத்தியமூா்த்தி, அமல அன்னை உருவம் பொறித்த கொடியை புனிதப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து அருள்தந்தையா்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

கொடியேற்ற நிகழ்வில், தொழிலதிபா் மாா்ட்டின், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் பிரான்சிஸ் இளங்கோ, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் மாணிக்கம் உள்ளிட்ட பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com