கொடிமங்கலத்தில் குடிநீர் வசதி கோரி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் கொடிமங்கலம் (அய்யனார் நகர்) கிராம பொது மக்கள் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் கொடிமங்கலம்(அய்யனார் நகர்)கிராம பொது மக்கள் அளித்த மனு விவரம்: எங்களது கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.எங்கள் கிராமத்திற்கு சிறுமின் விசைப் பம்பு மற்றும் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமின் விசை பம்பு மற்றும் மேல்நிலைத் தொட்டி பழுதடைந்தது. இதன்காரணமாக எங்கள் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே,மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com