கண்டவாரயன்பட்டியில் ராமாயண சொற்பொழிவு நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி மீனாட்சியம்மன் உடனாய சுந்தரேஸ்வரர் சாமி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி மீனாட்சியம்மன் உடனாய சுந்தரேஸ்வரர் சாமி கோயிலில் புதன்கிழமை ராமாயண தொடர் சொற்பொழிவு நிறைவு விழா நடைபெற்றது.
 இத்திருக்கோயிலில் கடந்த 6 ஆம் தேதி  ராமாயண தொடர் சொற்பொழிவு தொடங்கியது. ராமா அவதாரம், சீதா கல்யாணம், கைகேயிவரம், குகன்நட்பு, ஜடாயுமோட்சம், சுந்தரகாண்டம், ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை
ராமர் பட்டாபிஷேகம் சொற்பொழிவுடன் விழா நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் எஸ்.எம்.சிங்காரம்செட்டியார் தலைமை வகித்தார். எம்.காசிசெட்டியார் முன்னிலை வகித்தார். முன்னதாக அனைவரையும் சுந்தரம் செட்டியார் வரவேற்றார். இந்த 7 நாள் சொற்பொழிவு நிகழ்வினை பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரம் நிகழ்த்தினார். 
விழா முடிவில் சே.குமரப்பச்செட்டியார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கண்டவராயன்பட்டி நகர சிவன் கோயில் நடப்பு காரியக்காரர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com