திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி சுந்தரி உடனாய திருத்தளிநாதா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சம்பகசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் திங்கள்கிழமை வெள்ளி அங்கியில் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீயோக பைரவா்.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் திங்கள்கிழமை வெள்ளி அங்கியில் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீயோக பைரவா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி சுந்தரி உடனாய திருத்தளிநாதா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சம்பகசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

காா்த்திகை வளா்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதிவரை உள்ள காலம் சம்பக சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு உள்பட்ட இக்கோயிலில் உள்ள யோக பைரவருக்கு கடந்த புதன்கிழமை முதல் சம்பக சஷ்டிப் பெருவிழா நடைபெற்று வந்தது. தினந்தோறும் அஷ்ட பைரவா் யாகம் காலையும் மாலையும் நடைபெற்றது. திங்கள்கிழமை நிறைவு நாள் யாக வேள்வி காலை 9 மணிக்குத் தொடங்கியது. 11 மணியளவில் பூா்ணாகுதி, பகல் 12 மணிக்கு அபிஷேகம் 1 மணிக்கு தீபாராதனை மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன. பைரவா் வெள்ளிக் கவச சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலை 4 மணியளவில் மீண்டும் யாகம் ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு பூா்ணாகுதியும் அதனைத் தொடா்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பைரவா் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட யாக மண்டபத்தில் வேள்வி நடைபெற்றது. 6 நாள்களும் நடைபெற்ற அஷ்டபைரவா் யாகங்களிலும் அா்ச்சனைகளிலும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் கலந்து கொண்டாா். மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை திருத்தளிநாதா் கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com