காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா.குருமல்லேஷ்பிரபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் தாள்-1 மற்றும் தாள்-2 இல் உள்ள குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் என்ற பாடத்திற்கு அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும்
வட்டத்தின் மூலம் இலவசமாக பயிற்சி வகுப்புகள் ஜூன் 3, 4 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவுக் கலையரங்கில் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு நேரிலோ அல்லது 0465 - 223266, 8754266069 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அழகப்பாயுனிவர்சிட்டிஸ்டடிசர்க்கிள் அட் ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சலிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.