ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2019 07:43 AM | Last Updated : 04th April 2019 07:43 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை ஏடிஎம்-இல் பணம் நிரப்பச் சென்ற வாகனத்தில் ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர்-சிங்கம்புணரி சாலையில் கோவில்பட்டி விலக்கு அருகே துணை வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, எஸ்.ஐ. ராஜாமுகமது தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக சிங்கம்புணரி சென்ற தனியார் நிறுவன வாகனத்தை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ.4 லட்சம் இருந்தது. அதை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.