விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் அம்புரோஸ் ராஜ், மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ், துணை பாதிரியார் அகஸ்டின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்த பவனி தேவாலயத்திலிருந்து தொடங்கி, நகராட்சி அலுவலகம், ரயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை சாலை, எம்ஜிஆர் சிலை வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. 
விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் எஸ்எப்எஸ் மேல்நிலை பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ், துணை பாதிரியார் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. விருதுநகர் நிறைவு வாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியர் தாமஸ் வெனிஸ் தலைமையிலும், ஆர்.ஆர். நகர் தூய வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.      
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஏராளமானோர் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி  திரண்டனர். அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சி.எஸ்.ஐ. சபை குரு அருள்திரு டி.சாம்பிரபு, ஆர்.சி. தேவாலயத்தின் மறைவட்ட  அதிபர் அருள்பணி அல்வரஸ் செபாஸ்டின் ஆகியோர் தலைமையில் பவனி தொடங்கியது. இந்த பவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. இதில், உதவி பங்குத் தந்தை அந்தோணி துரைராஜ், அருள்பணி அற்புதசாமி, அருள்சகோதரர் மனோஜ்,  அருள்சகோதரிகள், திருச்சபை மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தேவாலயங்களில்  சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.புனிதன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com