கட்டுரை, கவிதைப் போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கல்
By DIN | Published On : 17th April 2019 06:33 AM | Last Updated : 17th April 2019 06:33 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகத்தில் செயல்பட்டு வரும் புத்தக மன்றத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். கட்டுரைப் போட்டியில் முதலாமாண்டு எம்.ஏ., ஆங்கிலத்துறை மாணவிகள் சி. காஞ்சனா தேவி முதல் பரிசும், மு. காயத்திரி 2-ம் பரிசும், சி.சீதாலெட்சுமி 3-ம் பரிசும் மற்றும் தமிழ்த்துறை முதலாமாண்டு மாணவி க. கலைச்செல்வி 3-ம் பரிசும் வென்றனர்.
பேச்சுப்போட்டியில் முதலாமாண்டு எம்.ஏ., ஆங்கிலத்துறை மாணவி சி. சீதாலெட்சுமி முதல் பரிசும், கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் வி.யோகேஷ்குமார் 2-ம் பரிசும், எம்.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவி செ. யோகிதா 3-ம் பரிசும் வென்றனர்.
குழு விவாதப் போட்டியில் கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஆ. பெனிட்டா கரோலின் முதல் பரிசும், எம்.ஏ., ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி மு. காயத்ரி 2-ம் பரிசும், எம்.ஏ., ஆங்கிலத்துறை இரண்டாமாண்டு மாணவர் பாலமுரளி 3-ம் பரிசும் வென்றனர்.
கவிதைப்போட்டியில் தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜ.ரெனினா பேகம் முதலிடம்பெற்றார்.
புத்தக மன்றத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களிடையே குழு விவாதம் செய்து பாடம் சம்பந்தமான விசாலமான அறிவைப்பெற வழிவகை செய்வதேயாகும் என்று மன்றத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...