"சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது அனைவரின் கடமையாகும்'

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் தலைமை வகித்தார்.
இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசியது: நமது மாவட்டம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையில் நகர் புறங்கள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடுகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
அவ்வாறு சேகரிக்கும் குப்பைகள் மக்கும், மக்காதவை என இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படுகிறது.
 மக்காத குப்பைகளை நவீன முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மண்ணின் வளம், நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் பொதுமக்கள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும் மழை பெய்து வேளாண் பணி சிறக்க மரங்களை அதிகமாக நடவு செய்து அதனை முறையாக பராமரிக்க வேண்டும். இன்றைய சூழலில் சுற்றுப்புறம் தூய்மை இல்லாத காரணத்தால் எண்ணற்ற தொற்று நோய்கள் பரவுகின்றன. ஆகவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது நமது அனைவரின் கடமையாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு நிலையத்தை ஆட்சியர் திறந்து வைத்தார்.
இம்முகாமில் சிவகங்கை நகராட்சி ஆணையர் அயூப்கான் உள்பட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com