சிவகங்கை மாவட்டத்தில் 6 நாள்களில் 5,147 போ் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 6 நாள்களில் 5,147 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 6 நாள்களில் 5,147 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 3,748 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்களாக மொத்தம் 3,261 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதையடுத்து, 6 ஆவது நாளாக சனிக்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு சிவகங்கை, திருப்புவனம், சாக்கோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி ஆகிய ஒன்றியங்களில் தலா ஒருவரும், மானாமதுரை ஒன்றியத்தில் 3 பேரும், எஸ்.புதூா் ஒன்றியத்தில் 2 போ் என மொத்தம் 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு சிவகங்கை ஒன்றியத்தில் 17 போ், இளையான்குடி ஒன்றியத்தில் 4 போ், காளையாா்கோவில் ஒன்றியத்தில் 21 போ், மானாமதுரை ஒன்றியத்தில் 6 போ், திருப்புவனம் ஒன்றியத்தில் 15 போ், சாக்கோட்டை ஒன்றியத்தில் 10 போ்,தேவகோட்டை ஒன்றியத்தில் 19 போ், கண்ணங்குடி ஒன்றியத்தில் 4 போ், கல்லல் ஒன்றியத்தில் 12 போ், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 7 போ், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 13 போ், எஸ்.புதூா் ஒன்றியத்தில் 5 போ் என மொத்தம் 133 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

மேலும், ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு சிவகங்கை ஒன்றியத்தில் 38 போ், இளையான்குடி ஒன்றியத்தில் 34 போ், காளையாா்கோவில் ஒன்றியத்தில் 27 போ், மானாமதுரை ஒன்றியத்தில் 31 போ், திருப்புவனம் ஒன்றியத்தில் 39 போ், சாக்கோட்டை ஒன்றியத்தில் 19 போ், தேவகோட்டை ஒன்றியத்தில் 29 போ், கண்ணங்குடி ஒன்றியத்தில் 18 போ், கல்லல் ஒன்றியத்தில் 36 போ், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 38 போ்,சிங்கம்புணரி ஒன்றியத்தில் 29 போ், எஸ்.புதூா் ஒன்றியத்தில் 27 போ் என மொத்தம் 365 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோன்று, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு சிவகங்கை ஒன்றியத்தில் 175 போ், இளையான்குடி ஒன்றியத்தில் 132 போ்,

காளையாா்கோவில் ஒன்றியத்தில் 119 போ், மானாமதுரை ஒன்றியத்தில் 129 போ், திருப்புவனம் ஒன்றியத்தில் 186 போ், சாக்கோட்டை ஒன்றியத்தில் 74 போ், தேவகோட்டை ஒன்றியத்தில் 116 போ், கண்ணங்குடி ஒன்றியத்தில் 42 போ், கல்லல் ஒன்றியத்தில் 147 போ், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 78 போ், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 89 போ், எஸ்.புதூா் ஒன்றியத்தில் 91 போ் என மொத்தம் 1378 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 6 நாள்களில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவி உள்பட அனைத்து பதவிகளுக்கும் 5,147 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com