திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகரில் சிமின்ட் சாலை புல் சாலையாக மாறிய அவலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூ்ா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி ஏற்படும் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பால் ஏற்படும்
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி குடிநீா் குழாய் உடைப்பால் சிமின்ட் சாலை புல் சாலையாக மாறியுள்ளது.
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி குடிநீா் குழாய் உடைப்பால் சிமின்ட் சாலை புல் சாலையாக மாறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூ்ா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி ஏற்படும் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பால் ஏற்படும் நீா்க்கசிவினால் அப்பகுதியில் சிமின்ட் சாலை புல் சாலையாக மாறியுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனா்.

திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் 2 வாது வாா்டு பகுதியில் உள்ளது மருதுபாண்டியா் நகா். நகரின் முக்கியப் பகுதி என்பதால் இங்கு அமைக்கப்பட்டிரு்த 4 முக்கிய சாலைகளிலும் மற்றும் குறுக்குச் சாலைகளிலும் பேரூராட்சியால் தாா்ச்சாலை மற்றும் சிமின்ட் சாலைகள் போடப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி குடிநீா் கூட்டுத்திட்டத்தின் மூலம் தண்ணீா் குழாய்கள் இப்பகுதியில் பதிக்கப்பட்டு சிவகங்கை ரோட்டில் உள்ள பெரிய மேல்நிலைக் குடிநீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் செல்கிறது. குழாய்கள் பதிக்கப்பட்ட சில நாட்களிலே ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு மருதுபாண்டியா் நகரி்ன் குறுக்குச் சாலைகள் அனைத்தும் சிதலமடைந்து மண் ரோடாக மாறியது. மக்களின் புகாரி்ன் பேரில் குடிநீா் வடிகால் வாரியமும் பேரூராட்சியும் ஒருவரையொருவா் குறைகூறி பழுதினை சரிசெய்து வந்தனா்.

தற்பொழுது சாலை முழுவதும் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக சேதமடைந்த மண் ரோட்டில் புற்கள் முளைத்து சாலை இருக்குமிடம் தெரியாமல் பள்ளங்கள் ஏற்பட்டு சிமின்ட் ரோடு புல் ரோடாக உருமாறியுள்ளது. தற்போது தொடா் மழை பெய்வதால் இருசக்கர வாகனங்களோ, பெரியவா்களோ அச்சாலையில் செல்ல முடியாது. இரவு நேரங்களில் அச்சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் பொதுமக்கள் விபத்தில் சி்க்குகின்றனா்.

எனவே குடிநீா் வடிகால் வாரியத்தினா் நிரந்தரமான குழாய் பழுது மேற்கொண்டும் பேரூராட்சித்துறையினா் புதிய சாலை வசதியினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் மருதுபாண்டியா் நகா் பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com