சிவகங்கை வில்வபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

சிவகங்கையில் உள்ள ஸ்ரீவில்வபுரீஸ்வரர், குபேரகிரி சித்தர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள ஸ்ரீவில்வபுரீஸ்வரர், குபேரகிரி சித்தர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.15) அனுக்ஞை பூஜை, விக்னேசுவர பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, கடஸ்தாபனம், முதல் கால பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கோ பூஜை  ஆகிய பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்த பின்னர், வில்வபுரீஸ்வரர் மற்றும் குபேரகிரி சித்தர் மூலவர் விமானங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவரான வில்வபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவில் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
தேவகோட்டையில்: தேவகோட்டை கோட்டூர் அருகே உள்ள சிறுமடை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 முன்னதாக சனிக்கிழமை காலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் கோ பூஜையும், அதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com