பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

மதுரையிலிருந்து மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.

மதுரையிலிருந்து மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.
உலக மக்கள் அனைவரும் சகல செல்வங்களையும் பெற்று ஆனந்தமாய் வாழ வேண்டி ஆண்டுதோறும் மாசி மாதம் ஏராளமான பக்தர்கள் மதுரையிலிருந்து மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரை புறப்படுகின்றனர்.
அதன்படி 7 ஆம் ஆண்டாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை பயணத்தை பிரத்யங்கிரா தேவி கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இப்பாதயாத்திரை பயணத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 19 ஆம் தேதி காலை பாதயாத்திரை பயணக்குழுவினர் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வந்தடைகின்றனர். 
இரவு கோயிலில் பௌர்ணமி விளக்குப்பூஜை நடைபெறுகிறது. வழியில் சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் உள்ளிட்ட பல இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கவும் அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com