திருப்பத்தூரில் பாளையநாட்டார் காவடிகள் பாதயாத்திரை

சிவகங்கை மாவட்டம் மணச்சை பாளையநாட்டார் காவடிகள் செவ்வாய்க்கிழமை குன்றக்குடியிலிருந்து பழனி தைப்பூச விழாவுக்கு புறப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் மணச்சை பாளையநாட்டார் காவடிகள் செவ்வாய்க்கிழமை குன்றக்குடியிலிருந்து பழனி தைப்பூச விழாவுக்கு புறப்பட்டன.
 மணச்சை குருசாமி முருகுசோலை மற்றும் ஸ்ரீசண்முக சேவா சங்கத் தலைவர் சுப்பையா தலைமையிலான பாதயாத்திரை காவடிகள், 41 ஆவது ஆண்டாக கடந்த 14 ஆம் தேதி பள்ளத்தூரிலிருந்து புறப்பட்டு, இரவு குன்றக்குடியில் தங்கி, செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டன. இப்பாதயாத்திரை காவடிகளில் நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியபட்டி, கண்டனூர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஒ.சிறுவயல் ஆகிய ஊர்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காவடி பக்தர்கள் கலந்து கொண்டு குன்றக்குடி வந்தடைந்தனர். பின்பு வேல் காவடி மட்டும் குன்றக்குடி மலைமேல் சென்று சண்முகநாதர் சுவாமி சன்னதியில் தரிசனம் பெற்று இடும்பன் சன்னதியில் தீபாராதனை காட்டப்பட்டு மலை அடிவாரத்தில் இருந்து பயணத்தை தொடர்ந்தனர்.
 பின்னர் புறப்பட்ட காவடிகள் பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி வழியாக  செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயம் வந்தடைந்தன. அங்கு காவடியுடன் வந்த நாட்டார்களால் வேலுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு காவடி பாதயாத்திரை காரையூர் சென்று பூஜை மற்றும் பஜனைகள் முடித்து மதியம் நடந்த அன்னதானத்தில் காவடி பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவடி சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி வழியாக செல்லும் காவடி புதன்கிழமை சமுத்திராபட்டியில் உள்ள நாட்டர்களால் வரவேற்கப்பட்டு வேல் பூஜை, மற்றும் அன்னதானம் செய்து இரவு அங்கு தங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து காவடிகள்  நத்தம், திண்டுக்கல், ஓட்டசத்திரம், குழந்தை வேலன் சன்னதி வழியாக பழனியில் இடும்பன் மலை அடிவாரத்திற்கு காவடி ஒருங்கிணைப்பாளர் துரைசிங்கம் வழிநடத்தலின்படி  சென்றடையும். இக்காவடிக்கான ஏற்பாடுகளை சண்முகா சேவா சங்க நாட்டார் அறக்கட்டைளையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com