காரைக்குடி வீரசஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (செக்ரி) வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீரசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (செக்ரி) வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீரசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி புதன்கிழமை காலையில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாலையில் யாகபூஜைகள் மற்றும் பாராயணங்கள், பூர்ணாகுதி நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் யாகபூஜைகள் நிறைவுற்று புனித நீர் கும்பங்கள் கோயிலை வலம் வந்து காலை 9.50 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை திருக்கோஷ்டியூர் லெட்சுமி நரசிம்மன், நகர சிவன்கோயில் என்.ரவிசர்மா, கோயில் அர்ச்சகர் வி.திருப்பதி மலை வாசன் ஆகியோர் நடத்தினர்.
விழாவில், செக்ரி இயக்குநர் நா.கலைச்செல்வி, செக்ரி விஞ்ஞானிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com