குழந்தைகளுக்காக பங்களிப்பு வழங்கியமைக்குக் கிடைத்த விருது '

குழந்தைகளுக்காக பங்களிப்பை வழங்கியமைக்காக கிடைத்த விருது இது என்று பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான காரைக்குடி தேவி நாச்சியப்பன்

குழந்தைகளுக்காக பங்களிப்பை வழங்கியமைக்காக கிடைத்த விருது இது என்று பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான காரைக்குடி தேவி நாச்சியப்பன் தெரிவித்தார்.

 தேவி நாச்சியப்பன் 22 வயதில் கோகுலம் இதழில் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியவர். சிறார் இலக்கியத்துறையில் 12 நூல்களைப் படைத்திருக்கிறார். முதுகலைத் தமிழாசிரியையான இவர் குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். குழந்தைக் கவிஞர் செல்லகணபதியுடன் இணைந்து ஊர்கள் தோறும் சென்று குழந்தைகளை ஒருங்கிணைத்து அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் சார்பில் கடந்த 24 ஆண்டுகளாக விழா நடத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச்செம்மல் விருது, ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

பாலசாகித்ய புரஸ்கார் விருதுபெற்றது குறித்து தேவி நாச்சியப்பன் கூறுகையில், குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுடைய வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கியமைக்கு இவ்விருது கிடைத்துள்ளது என்றார்.

இளம் எழுத்தாளர்களை உருவாக்கும்'

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த சபரிநாதன் பொறியியல் பட்டதாரி. 2011-இல் களம்-காலம்-ஆட்டம்', 2016-இல் வால்' ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ஸ்வீடன் நாட்டு கவிஞர் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு இவர் மொழிபெயர்த்துள்ளார்.  இதுபோன்ற விருதுகள் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும்' என்று சபரிநாதன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com