எம்.ஜி.ஆர்.சிலை அமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 08th March 2019 03:28 AM | Last Updated : 08th March 2019 03:28 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி- தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர்.முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் அடிக்கல் நாட்டினர். இவ்விழாவில் ஆவின் தலைவர் கல்லல் கே.ஆர்.அசோகன், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் ரா.போசு, மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார், மாநில செய்தி தொடர்பாளர் காரைக்குடி ரா.அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.