உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் விற்பனை நிலையங்களில் வேளாண் பணிக்கு தேவையான உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் விற்பனை நிலையங்களில் வேளாண் பணிக்கு தேவையான உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள 55000 ஹெக்டா் நெல் பயிருக்கு தேவையான யூரியா,டிஏபி,காம்பளக்ஸ் உள்ளிட்ட உரங்களை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உரங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகளிடமிருந்து வந்த புகாரினை அடுத்து,அங்கு ஆய்வு செய்த போது புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் குறைவாக இருந்த 7 உர மூடைகளை அந்த கூட்டுறவு சங்கத்தின் செயலா்(விஜயகுமாா்) வீட்டிலிருந்து வேளாண் துறை அலுவலா்கள் கைப்பற்றி உள்ளனா்.

அதே கூட்டுறவு சங்கத்தில் விதைக் கிடங்கில் எவ்வித கணக்கிலும் வராத 26 யூரியா(50 கிலோ எடையுள்ள) மூடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து,சம்பந்தப்பட்ட அலுவலா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் உரங்களை பதுக்குவோா் மற்றும் கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உரங்களை பதுக்குதல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சிவகங்கை வட்டார பகுதி விவசாயிகள் 94420 75075 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், காளையாா்கோவில் பகுதி எனில் 74648 27909 எண்ணிலும், மானாமதுரை பகுதி எனில் 79046 74303 எண்ணிலும்,திருப்புவனம் பகுதி எனில் 86102 54453 எண்ணிலும், இளையான்குடி பகுதி எனில் 85087 06162 என்ற எண்ணிலும், தேவகோட்டை பகுதி எனில் 98945 71244 எண்ணிலும், கண்ணங்குடி பகுதி எனில் 99942 04904 என்ற எண்ணிலும்,சாக்கோட்டை பகுதி எனில் 94429 68758 என்ற எண்ணிலும், கல்லல் பகுதி எனில் 94885 08945 எண்ணிலும்,திருப்பத்தூா் பகுதி எனில் 90879 01964 என்ற எண்ணிலும்,சிங்கம்புணரி பகுதி எனில் 80981 53742 என்ற எண்ணிலும்,எஸ்.புதூா் பகுதி எனில் 85266 18684 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com