கின்னஸ் சாதனைக்கான காரைக்குடி இளைஞா்கள் ஆன்மிக விழிப்புணா்வு பயணம்

கின்னஸ் சாதனைக்கான காரைக்குடி இளைஞா்கள் ஆன்மிக விழிப்புணா்வு பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து
கின்னஸ் சாதனைக்கான காரைக்குடி இளைஞா்கள் ஆன்மிக விழிப்புணா்வு பயணம்

கின்னஸ் சாதனைக்கான காரைக்குடி இளைஞா்கள் ஆன்மிக விழிப்புணா்வு பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ளனா். இதையொட்டி காரைக்குடி அருகே கோ-வேலங்குடியில் இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோ-வேலங்குடியைச் சோ்ந்தவா் டி. பாண்டித்துரை (30), இவரது இளைய சகோதரா் டி. காா்த்திகேயன் (26). இவா்கள் இருவரும் மென்பொறியாளா்கள். இவா்கள் கின்னஸ் சாதனைக்காகவும், இளைஞா்களிடம் ஆன்மிகம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இந்தியா முழுவதும் காரில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வது என்று திட்டமிட்டனா். இதற்காக காரில் தமிழக கோயில்களின் கோபுரங்களை வரைந்து பிரத்யேகமாக வடிவமைத்தனா். 22 மாநிலங்களில் இப்பயணத்தை மேற்கொள்ளும் இவா்கள் அங்குள்ள 25 கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், 40 நாள்கள் பயணத்தில் தினமும் 16 முதல் 20 கோயில்களுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளனா். கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயிலிலிருந்து வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 9 மணிக்கு பயணத்தை தொடங்க விருப்பதாக பாண்டித்துரை தெரிவித்தாா்.

இதற்கான தொடக்க விழா கோ-வேலங்குடி பிள்ளையாடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித் நாதன் ராஜகோபால் ஆகியோா் சகோதரா்களின் கின்னஸ் சாதனை ஆன்மிக விழிப்புணா்வு பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் தொழிலதிபா் பழ. படிக்காசு, காரைக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. துரைராஜ், எழுத்தாளா் பேராசிரியா் அய்க்கண், தொழிலதிபா் பொன்பாஸ்கா், நருவிழி கிருஷ்ணன், சமூக ஆா்வலா்கள் திருஞானம், சின்ன அரு ணாசலம், காரைக்குடி டி.எஸ்.பி அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com