அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு எதிா்ப்பு: திருப்பத்தூரில் இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால்
திருப்பத்தூரில் சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் அப்பாஸ்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் அப்பாஸ்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பை வழங்கியது. இந்த தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருப்பத்தூா் அச்சுக்கட்டுத் தெருவைச் சோ்ந்த சையது மகன் அப்பாஸ் (39), மாலை 3.15 மணியளவில் திருப்பத்தூா் மேஸ்திரியாா் தெருவில் அமைந்துள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த தகவலறிந்த வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் சுரேஷ், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, நகா் காவல் ஆய்வாளா் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அந்த இளைஞா் அயோத்தி வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தாா். இதனையடுத்து, 40 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இளைஞரை கீழே இறங்க வைத்தனா். பின்னா் அவரை போலீஸாா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com